aNNOUNCEMENTS
Our Projects
Latest
தேசியக் கருத்தரங்கம் “தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்”
சமத்துவபூமி அறக்கட்டளை
பொன்னேரி-
601204
மற்றும்
விழுப்புரம் விசாலட்சுமி பதிப்பகம்
இணைந்து நடத்தும்
சமத்துவபூமி அறக்கட்டளை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கிவரும் சமத்துவ பூமி அறக்கட்டளை இவ்வாண்டு(2014) பதிவுசெய்யப்பட்டு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான தனது பணியினை செய்துகொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகத்தில் பழங்குடிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட கருத்தரங்கம் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டது.
விசாலட்சுமி பதிப்பகம்
விழுப்புரம் மாவட்டம் கடையத்தில் 2009- ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் விசாலட்சுமி பதிப்பகம் விளிம்புநிலை மக்கள் குறித்து பல்வேறு நூல்களை வெளியிட்டு வருகிறது. 2013- இல் சமூக வரலாற்றில் அரவாணிகள் என்னும் தலைப்பிலான கருத்தரங்கையும், 2018இல் பேராசிரியர் ஜே. ஆர். இலட்சுமியின் வாழ்வும் இலக்கியமும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கையும் நடத்தியது. தற்போது ‘தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்’ என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சிறப்படைய பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் சமூக ஆர்வளர்கள் அனைவரும் நல் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
கருத்தரங்கப் பொருண்மை
தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் வாழும் பழங்குடிகள் குறித்தும் மாற்றுப் பாலினத்தவர் குறித்தும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இத்தேசியக்கருத்தரங்கம் நிகழ்த்தப்பெறுகிறது.
- பழங்குடிகளின் பண்பாடு மாறிவரும் சூழல்
- பழங்குடிகளின் இலக்கியப்பதிவுகள்
- பழங்குடிகளை கள ஆய்வு செய்து அவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துதல்.
- பண்டைய காலம் முதல் தற்காலம் வரையிலான மாற்றுப்பாலினத்தவர் குறித்த பதிவுகள்.
- மாற்றுப்பாலினத்தவரின் நேர்காணல் கட்டுரைகள்.
- இன்றைய சமூகத்தில் இருளர், நரிக்குறவர் முதலிய பழங்குடிகள் மற்றும் ஆணாகப்பிறந்து பெண்ணாக வாழும் திருநங்கையர், பெண்ணாகப்பிறந்து ஆணாக வாழும் திருநம்பிகள் வாழும் வாழ்வியல் அவலங்களை பதிவு செய்தல்.
இவை போன்று பழங்குடிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்(திருநங்கை, திருநம்பி) தொடர்புடைய எந்தபொருண்மையிலும் கட்டுரை எழுதலாம்.
கட்டுரையாளர் கவனிக்க வேண்டியவை
- கட்டுரை எழுத விரும்புவோர் கீழே உள்ள புலனக்குழுவில் இணையவும். https://chat.whatsapp.com/HZSUwnTfPgk0E6oR7KwXie
- பிறநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கட்டுரைகள் எழுதலாம்.
- ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வாளரின் சொந்த முயற்சியில் அமைந்ததாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் குறித்து ஆராயும் வகையில் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
- அடிக்குறிப்புகள், ஆய்வுப் பொருண்மையோடு கூடிய, பிழைகளற்ற சிறந்த கட்டுரைகள் மட்டுமே தெரிவு செய்யப்படும்.
- கட்டுரைகள் Latha Unicode Font – இல் 10 புள்ளி அளவில் இருக்க வேண்டும். 5 பக்கம் குறையாத அளவில் இருப்பது சிறப்பு.
- கட்டுரையில் கட்டுரையாளரின் முகவரி, புலனஎண்(Whatsapp), மின்னஞ்சல் முகவரி, ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
- ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் அமையலாம்.
- ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பெற்று மே, 2024இல் நடைபெறும் கருத்தரங்க நாளன்று ISBN எண்ணுடன் ஆய்வுக்கோவையாக வெளியிடப்படும்.
- கட்டுரைகளை 30.04.2024 அன்றைக்குள் samathuvaboomitrust@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- ஆய்வுக்கட்டுரையாளர்கள் நூலாக்கக் கட்டணமாக 500 ரூபாயை 8940872100 என்னும் எண்ணிற்கு Gpay or Phonepe மூலம் செலுத்தி, அதற்கான ரசீதை screen shot எடுத்து 8940872100 எண்ணிற்கு அனுப்பவும்.
கருத்தரங்க ஆலோசனை
முனைவர் ஜே. ஆர். இலட்சுமி
தமிழ்ப்பேராசிரியர்(பணி நிறைவு), மாநிலக் கல்லூரி- 600005.
தொடர்புக்கு
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் கி. அய்யப்பன் – 9962660279
ம. அனிதா – 8940872100
New announcement
சமத்துவபூமி அறக்கட்டளை
பொன்னேரி- 601204
மற்றும்
விழுப்புரம் விசாலட்சுமி பதிப்பகம்
இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
“தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்”
கருத்தரங்கத்திற்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரை எழுத விரும்புவோர் கீழே உள்ள புலனக்குழுவில் இணையவும். https://chat.whatsapp.com/HZSUwnTfPgk0E6oR7KwXie