M. Anitha Managing Trustee
நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களும்
நோக்கங்களும் குறிக்கோள்களும்
I. தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் இருந்து விடுபட போராடிவரும் இருளர், நரிக்குறவர் போன்ற பழங்குடிகளின் வாழ்வியல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல்.
II. சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழ்ந்துவரும் மாற்று பாலினத்தவர் வாழ்க்கைக்கான மேம்பாட்டு பணிகள் செய்தல்.
III. தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகள் மற்றும் மாற்று பாலினத்தவரின் சமூகநிலை, கல்வி, பண்பாடு , கலாச்சாரம் தொடர்பான தரவுகளை திரட்டி ஆவணப்படுத்துதல்.
IV. தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை நூலாக வெளியிடுதலும்.
V. பழங்குடி பெண் குழந்தைகளுக்கு கல்வியின் இன்றியமையாமையைக் கூறி, ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு மேற்படிப்புகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும், வழிகாட்டலும்.
VI. மாற்றுப்பாலினத்தவர் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுப்பதிலிருந்து விடுபட விழிப்புணர்வு செய்தல் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருதல்.
VII. மாற்றுப்பாலினக் குழந்தைகள் இடைநிற்றலை தடுத்து, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்பை தொடர பாடுபடுதல்.
VIII. படிப்பறிவில்லா பழங்குடிகள் பகுதிகளில் இரவுநேர படிப்பகமும் நூலகமும் தொடங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து கல்வி பணி செய்தல்.
IX. தழிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி, இலக்கியம், நாட்டுபுறவியல் மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வியல் குறித்தான பொருண்மைகள் அடங்கிய ஆய்விதழை வெளியிடுதல்.
X. சமூகத்தில் பழங்குடிகள், நாடோடிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான புரிதல் ஏற்பட, அவர்கள் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல்.
XI. சமூக மேம்பாட்டிற்கு உழைத்துவரும் ஆசிரியர்கள், சமூக ஆர்வளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பல துறை சாதனையாளர்கள் முதலியோரை ஊக்கப்படுத்தும் நோக்கில் சேவையைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்.
XII. சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் பழங்குடிகள், நாடோடிகள் மற்றும் மாற்றுப்பாலின மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்கான உண்டு உறைவிடம் தொடங்கி சமூகத்தொண்டு செய்தல்.
Aims and objectives
1. To carry out livelihood development work of the tribes like Irular, Narikkuravar who are struggling to get rid of marginal status in Tamil Nadu.
2. To bring out development work for the lives of transgender people who are living on the marginalized in the society.
3. Collecting and documenting data related to the social status, education, culture and culture of the tribal’s and transgender living in Tamil Nadu.
4. Conducting research on tribal’s and transgender people living in Tamil Nadu and publishing them as a book.
5. Advocating and promoting the importance of education to the tribal girl child and sensitizing and guiding them towards higher studies.
6. Creating awareness and creating employment opportunities for transgender people to avoid sex work and begging.
7. To prevent transgender children from dropping out and to make them aware of the importance of education and strive to continue their studies.
8. To promote the habit of reading by starting night study and library in illiterate tribal areas and doing educational work.
9. To publish a research journal containing material on the culture, Tamil language, literature, folklore and the livelihood of marginalized people.
10. Conducting seminars and workshops related to tribal’s, nomads and transgender in the society.
11. Appreciating the service and awarding certificates of appreciation to teachers, social activists, doctors, writers, social researchers and achievers in many fields who are working for social development.
12. Social philanthropy by starting shelters for tribals, nomads and transgender students living on the margins of the society.
13. Cleaning and conservation of water bodies, tree plantation, and cleanliness work around schools and colleges. To create awareness among students and public about the importance of nature conservation and environmental cleanliness.